காளவாசல் பகுதியில் நிறுத்தப்பட்ட 108…

மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 108 அவசர கால ஊர்தி இயங்கி வந்தது.தற்போது அந்த வாகனம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது .காளவாசல் பகுதி அடிக்கடி விபத்து நடக்கும் பகுதி என்பதால் இந்த இடத்தில் எப்பொழுதும் ஒரு அவசர கால ஊர்தி இருக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் காளவாசல் பகுதியில் மேம்பாலம் வேலைகள் நடப்பதால் அவசரத்திற்கு வாகனம் தேவைப்பட்டால் சுமார் மூன்றிலிருந்து நான்கு கிலோமீட்டர் இருந்துதான் வாகனம் வர வேண்டிய நிலை உள்ளது.வாகனம் வருவதற்கு காலதாமதம் ஆவதாகவும் விபத்தில் காயம் அடையும் நபர்கள் கோல்டன் அவர்ஸ் என்னும் நேரத்தை கடந்து ரத்தங்கள் அதிக அளவு வெளியேறி உயிர் இழக்கும் சூழ் நிலையும் ஏற்படும் அஞ்சுகிறார்கள் பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு இஎம்ஆர்ஐ 108 நிர்வாகம் மீண்டும் காளவாசல் பகுதியிலேயே அந்த வாகனத்தை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். <

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!