மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சக்கரப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மனைவி அழகம்மாள் என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்படவே கடந்த 27ஆம் தேதி விக்கிரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு பின் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் டிரைவர் பிரகாஷ் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் அஜித்குமார் ஆகியோர் அழகம்மாளை ஏற்றி சென்றுள்ளனர். இந்நிலையில் கீழா மாத்தூர் அருகே சென்றபோது அழகம்மாளுக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்படவே 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி மருத்துவ உதவியாளர் அஜித்குமார் அழகம்மாளுக்கு பிரசவம் பார்த்துள்னர். இந்த பிரசவத்தில் அழகம்மாளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து தாயையும் சேயையும் மீண்டும் விக்கிரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்தனர். இதனை தொடர்ந்து அஜித்குமாரின் சொந்த ஊரான சின்னகுறவகுடியில் இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை பாராட்டும் விதத்தில் அவசரகால மருத்துவ உதவியாளர் அஜித்குமாருக்கு சின்னகுறவடி கிராம ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் ஒன்றிணைந்து ஊர்மந்தையில் பாராட்டு விழா ஏற்பாடு செய்து அஜித்குமாருக்கு சால்வை நினைவுத்தும் இனிப்புகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.அவரின் சேவையை அனைவரும் மனதார பாராட்டினார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









