பூதலூர் ஒன்றியத்தில் 100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நீண்ட நாள் சம்பள பாக்கியை உடனே விடுவிக்க கோரியும்,கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் பூதலூர் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் பூதலூரில் பிப்ரவரி 14 அன்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று மாலை (பிப்ரவரி 13) போராட்டக்காரர்களுடன் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மறிய ஜோசப் தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்(திட்டம்) உள்ளிட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அதிகாரிகள் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள்,வருவாய்த்துறை அதிகாரிகள்,100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கான ஊதிய பாக்கி ஒரு வார காலத்திற்க்குள் வழங்கப்படும் எனவும்,கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்க கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்று நிவாரணம் வழங்கிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும்,மேற்படி நிவாரண தொகை விரைவில் வழங்கிட வேளாண்மைத்துறை அலுவலரிடமிருந்து மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி வைத்திட முடிவு எட்டப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக போராட்டக்காரர்களால் அறிவிக்கப்பட்டது.கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் இரா.இராமச்சந்திரன்,நிர்வாகிகள் எம்.சத்தியமூர்த்தி,கே.மாரிமுத்து,
கே.சந்திரசேகர்,வீ.ராமமூர்த்தி,என்.முத்துலெட்சுமி,ஜி.கணேசமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You must be logged in to post a comment.