ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பேரையூரை சேர்ந்த தர்மராஜ்-வசந்தி தம்பதியின் மகள் காவிய ஜனனி கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.அவர் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில் மட்டும் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மாணவி காவிய ஜனனிக்கு கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை குழுமத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் மாணவி எனது மாவட்டைத்தை சேர்ந்தவர் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.அவரது லட்சியமான கலெக்டர் ஆகவேண்டும் என்பது அதை அடைய வேண்டும் எனவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் என கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை குழுமத்தின் ஆசிரியர் சையது ஆப்தீன் கூறியுள்ளார்.

You must be logged in to post a comment.