ராமநாதபுரம் அரசு பேருந்தில் பயணம் செய்த பயனிடம் 10 லட்சம் பணம் பறிமுதல்

பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுப்பதற்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே குஞ்சார் வலசை சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரி ராமமூர்த்தி தலைமையில் தீவிர சோதனை ஈடுபட்ட போது திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தில் அழகன் குளம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் கணக்கில் வராத 10 லட்சம் பணம் எடுத்துச் சென்றதை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சக்திவேலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த பணம் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!