வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக நிலவேம்பு கசாயம் வினியோகம்..

கீழக்கரையில் உள்ள சமூக அமைப்புகளில் 20 வருட சமூக சேவையில் நிலைத்து இருக்கும் அமைப்பு நாசா (NASA – North Street Association for Social Activities) என்று அறியப்படும் வடக்குத் தெரு சமூக நல அமைப்பாகும். வடக்குத் தெரு மக்களின் தேவையை அறிந்தும், சூழ்நிலைகளுக்கு ஏற்ப மக்களுக்கு பல சேவைகளை செய்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் கடந்த சில வாரங்களில் பெய்த மழையினால் ஏற்பட சாக்கடை மற்றும் கழிவு நீர் தேக்கம் ஆகியவற்றால் டெங்கு, மலேரியா

போன்ற பல தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதை தடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று வடக்கு தெருவில் நில வேம்பு கசாயம் வீடு தோறும் வினியோகம் செய்யும் நிகழ்ச்சியை தொடங்கினார்கள். அதைப்பற்றி அவ்வமைப்பின் கீழக்கரை தலைவர் சகோ.அரஃபாத் கூறுகையில், நில வேம்பு கசாயம் வினியோகத்திற்கு தெரு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததாகவும், ஒரே நாளில் அனைத்து வீடுகளுக்கும் வினியோகம் செய்ய இயலாத காரணத்தால் இன்னும் சில தினங்களுக்கு தொடரும் என்பதை தெரிவித்தார். மேலும் இந்த வினியோத்தில் நாசா அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தெரு இளைஞர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தெரு மக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Like this:
Like Loading...
Related
You must be logged in to post a comment.