ஹிந்தி மொழிக்கும் சமஸ்கிருதம் மொழிக்கும் நிதி ஒதுக்கிய ஒன்றிய அரசு ஏன் செம்மொழியான எங்கள் தாய் மொழிக்கு ஒதுக்கவில்லை எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் கேள்வி
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள தொண்டியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில், ‘அரசியலமைப்பு விரோத வக்பு மசோதா 2024’ஐ ரத்து செய்யக் கோரியும், 1991 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தி இறை இல்லங்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் சிறப்புரை ஆற்றினார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் வக்பு வாரியச் சொத்துக்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், அரசின் புதிய மசோதா எவ்வாறு வக்பு வாரியத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், 1991 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் மட்டுமே, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தையும், மரியாதையையும் பாதுகாக்க முடியும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் எங்கள் பிள்ளைகள் படிக்க தயார் ஆனால் இந்தி திணிப்பை தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்றும் தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வருவதற்கு ஏன் ஒன்றிய அரசு முற்படுகிறது தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை சிறப்பாக தான் இருக்கின்றது ஆகையால் தமிழ்நாடு கல்விக் கொள்கை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் ஒன்றிய அரசு மாணவருடைய கல்வித் திறனை முடக்க நினைத்தால் எஸ்பிஐ கட்சி அதனை எதிர்த்து போராடுவோம் என்று தெரிவித்தார்..
இந்தக் கூட்டத்தில், தொண்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, வக்பு வாரியத்திற்கு ஆதரவாகவும், அரசின் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டு எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் அணி கலந்தர் ஆசிக் அகமது செய்திருந்தார்.
You must be logged in to post a comment.