ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 76 வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தேசிய கொடி ஏற்றினார்.!
இந்திய திருநாட்டின் 76-வது குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, 96 பயனாளிகளுக்கு ரூ.55.70 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ராமநாதபுரம், காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக சமாதான புறாக்களை பறக்க விட்டு, சுதந்திரத்தின் பெருமையை வலியுறுத்தும் விதமாக மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
அதனைத்தொடர்ந்து, காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 72 காவல்துறையினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களையும், மாவட்ட அளவில் சிறப்பாகப் பணியாற்றிய 92 காவல்துறையினருக்கு நற்சான்றிதழ்களையும், சிறப்பாக பணியாற்றிய 210 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும், மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார்.
பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 02 பயனாளிகளுக்கு ரூ,2,03,600/- மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பாக 03 பயனாளிகளுக்கு ரூ.75,000/- க்கான போர் நடவடிக்கையில் உயிர் தியாகம் செய்த படைவீரரை சார்ந்தோருக்கான வருடாந்திர பராமரிப்பு மானியமும், கூட்டுறவுத்துறை சார்பாக 74 பயனாளிகளுக்கு ரூ.44,70,000/-க்கான மகளிர் சுய உதவிக் குழு கடன்களும், தாட்கோ சார்பாக 10 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.2,325/- மதிப்பீட்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் பேட்டரி ஸ்பிரேயர் மற்றும் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிங் சல்பேட் 10 கிலோவும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.20,070/- மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும், மீன்வளத்துறை சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.8,00,000/-க்கான படகு சேதமடைந்ததற்கான நிவாரணத் தொகை என மொத்தம் 96 பயனாளிகளுக்கு ரூ.55,70,995/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.



































You must be logged in to post a comment.