மாவூர் பால் உற்பத்தியாளர்கள்
கூட்டுறவு சங்கத்தின் மூலம் மகளிர் குழு உறுப்பினர்கள் மானியத்திட்டம்





இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியம் மாவூர் பால் உற்பத்தியாளர்கள்
கூட்டுறவு சங்கத்தின் மூலம் மகளிர் குழு உறுப்பினர்கள் மானியத்திட்டத்தின் மூலம் கறவைமாடுகள் வளர்க்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு பயனாளிகளிடம் பயன்கள் குறித்து கேட்டறிந்ததுடன் சிறப்பாக கறவை மாடுகள் பராமரித்து வரும் மகளிர்களுக்கு ரூ 3000/ – ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார் மாவூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பயன்பெற்று வரும் பயனாளி வசந்தா முருகேசன்  தெரிவிக்கையில்,
எங்கள் குடும்பத்தில் பல ஆண்டுகளாக கறவை மாடுகள் வளர்த்து விவசாய பணிகளுடன்
சேர்த்து  இணைத்தொழிலாக  செயல்படுத்தி வருவதால் எங்களுக்கு மிகவம் பொருளாதார
முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருந்து வருகின்றன தற்பொழுது பால் உற்பத்தியாளர்கள்
கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் குழு உறுப்பினர்களுக்கு மானிய திட்டத்தில் கறவை மாடுகள் வழங்க கடனுதவிகள் வழங்குவதன் மூலம் கறவை மாடுகள் கூடுதலாக வாங்கி பராமரித்து அதன் மூலம்
கிடைக்கக்கூடிய வருவாயில் பெறப்பட்ட கடனை திரும்ப உரிய தவணையில் செலுத்துவதுடன்
மாதந்தோறும் நிலையான வருவாய் கிடைப்பதால் வீட்டின் பொருளாதாரத்திற்கு மிக பயனுள்ளதாக இருந்து வாகின்றன மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், மகளிர் குழுவில் உள்ள உறுப்பினர்கள் கறவை மாடுகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்  இப்பகுதி விவசாயம் நிறைந்த பகுதி என்பதால் கறவை மாடுகள் வளர்ப்பதற்கு ஏற்ற சூழலாக இருந்திடும் மேலும்
மகளிர்கள் கறவை மாடு வாங்குவதற்காக கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய உரிமையாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவும் மானியத் திட்டத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது மேலும் கறவை மாடுகள் வளர்க்கும் பகுதிகளுக்கு வந்து ஆவின் மூலம் பால் கொள்முதல் செய்தும் அதற்குரிய பணம் வாரம் ஒரு முறை பட்டுவாடா செய்யப்பட்டு வருகின்றன இது மட்டுமின்றி ஆவின் துறையின் மூலம் கறவை மாடுகள் வளர்ப்பவர்களுக்கு தேவையான
தீவனம் பெற்று பயன்பெறும் வகையில் ஒரு கிலோ தீவனத்திற்கு ரூ 6/- மானியம் வழங்கப்படுகிறது கிசான் கிரிடிட் கார்டு (Kcc) திட்டத்தின் மலம் கறவை மாடுகள் வழங்கப்பட்டு வருகிறதுஃ கறவை மாடுகள் வளர்ப்பதற்கு என சிறப்பு கவனம் எடுக்க வேணடியதில்லை விவசாய பணிகளுடன சோ்த்து இணைத்தொழிலாக  கறவை  மாடுகள்  வளர்த்து பயன்பெறலாம் இதன் மூலம் ஒவ்வொரு
குடும்பத்திலும் மகளிர்கள் பொருளாதார முன்னேற்றம் பெற்று பயன்பெறும் வகையில் கறவை மாடுகள் வளர்த்து  பயன்  பெற்றிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலவர்  சிம்ரன்ஜீத் சிங் காலோன்  தெரிவித்தார்
உராம~ச ஈப் 7சாப்பம் மேலும்  கறவை  மாடுகள்  வளர்ப்பதை  ஊக்கப்படுத்தும்  வகையில்   மாவூர்  பால் உற்பத்தியாளாகள் கூட்டுறவு சங்கம் மூலம் மானியத்தில் கடன் பெற்று சிறப்பான முறையில் கறவை
மாடுகள்  வளர்த்து பயன்பெற்று வந்த வசந்தா அவர்களுக்கு 300o/- ரொக்கப்பரிசு அதேபோல் சிறப்பான முறையில் கறவை மாடுகள் வளாப்புக்கு உறுதுணையாக இருக்கும் பால்
உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ 3000/- ரொக்கப்பரிசும் ஆவின் நிர்வாகம் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர்  வழங்கி பாராட்டியதுடன் இதேபோல் மற்ற பகுதிகளிலும் கறவை மாடுகள் வளர்ப்பவர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆவின் நிர்வாகம் மூலம் வழங்கும் ரொக்கப் பரிசுத்தொகையினை பெற்று பயன்பெற்றிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத்
சிங் காலோன் தெரிவித்தார்
இந்த  ஆய்வின்போது  பால்  உற்பத்தியாளர்  கூட்டுறவு  சங்க  இணப்பதிவாளர் புஷ்பலதா , பால் உற்பத்தியாளர் சங்க கண்காணிப்பு அலுவலர்  அண்ணாமலை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!