திருவாடானை அருகே பாண்டுகுடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாம் ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் – முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் அறிவுறுத்தலின் படியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்- சார்பு நீதிபதி சரவண பாபு ஆலோசனையின் படி திருவாடானை வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் தலைவர் அன்டோனி ரிஷந்தேவ் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேசிய நீதிபதி அவர்கள் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமை சட்டம் சம்மந்தப்பட்ட தகவல்களை மாணவ, மாணவிகளுடன் தெரிவித்ததுடன், நாட்டின் எதிர்காலமே இன்றைய மாணவர்களாகிய நீங்கள் தான் என்பதனை மனதில் கொண்டு திறம்பட கல்வி பயின்று ஒவ்வொறுவரும் தங்களுக்குள் ஒரு லட்சியத்தை மனதில் வைத்து திறமையை வளர்த்து கல்வி கற்று சாதனையாளர்களாக மாற வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் சொல்லிற்கு கட்டுபட்டு மதித்து நடத்திட வேண்டும். முதலில் ஒழுக்கத்தை கற்றுகொள்ள வேண்டும். வாழ்வில் முன்னேற வேண்டும், ஒரு ஐஏஎஸ் ஆகவோ, ஐபிஎஸ் ஆகவோ அல்லது டாக்டர், இஞ்சினியர், வழக்கறிகராகவோ. மற்றும் பல துறை சார்ந்த உயர் பொறுப்புகளின் பதவியில் அமர வேண்டும் என்றாலும் முதலில் கல்வி முக்கியம் ஆகையால் பள்ளி பருவத்தில் யாரும் பள்ளிக்கு செல்லாமல் குழந்தை தொழிலாளர்களாக வேலைக்கு செல்லக் கூடாது. அவ்வாறு சென்றாலோ அல்லது குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினாலும், சட்டப்படி குற்றமான செயல் , அதே போல் குழந்தை திருமணம் நடைபெறாமல் தடுத்து நிறுத்திட வேண்டும். மாணவர்கள் தேவையற்ற விசயங்களில் கவனம் செலுத்தாமல் கல்வியல் கவணம் செலுத்தி மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என கூறியதுடன் .இப்பள்ளி 10 மற்றும் 12 ம் வகுப்புகளில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று வருவதாக கேள்விப்பட்டேன். மிக்க மகிழ்சியாக உள்ளது. இந்த கிராமப்புறத்தில் உள்ள இப்பள்ளி தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று வருவது என்பது மிகவும் பாராட்ட தக்கது ஆகையால் இந்த சாதனை படைத்திட உறுதுணையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர், மற்றும் இருபாலர் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியதுடன் வட்ட சட்டப் பணிகள் குழுவின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்கள். மேலும் மூத்த வழக்கறிஞர் தனபால் அவர்களும் கலந்து கொண்டு 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்தும். சட்டம் சார்ந்த சட்ட விழிப்புணர்வு உரையாற்றினார். இம்முகாமில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு சம்மந்தமான துண்டு பிரசுரங்களையும் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், மற்றும் இருபாலர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை சட்டதன்னார்வலர் கோட்டைச்சாமி செய்திருந்தார்.
You must be logged in to post a comment.