கீழக்கரை மக்கள் களம் சார்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் சம்பந்தமான பயிற்சி முகாம்.
keelai
November 30, 2016
கீழக்கரைமக்கள்களம்சார்பாகதகவல்அறியும்உரிமைசட்டம்சம்பந்தமானபயிற்சிமுகாம். 04-11-2016 அன்று கீழக்கரை வடக்குத் தெருவில் உள்ள இஸ்லாமிய அமைதி மையத்தில் கீழக்கரை மக்கள் களம் சார்பாக தகவல் அறியும் உரிமை சட்டம்; சம்பந்தமான பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கீழக்கரையைச் சார்ந்த சமூக ஆர்வலர் மற்றும் மக்கள் களத்தின் முக்கிய நிர்வாகியான சகோ.சாலிஹ்ஹீசைன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கீழக்கரையைச் சார்ந்த 20 பேருக்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள சகோதரர்கள் கலந்து கொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்டு அறிந்து கொண்டார்கள். இந்த பயிற்சியில் தகவல் அறியும் உரிமை சட்டம சம்பந்தமான செய்முறை விளக்கங்கள் மற்றும் எவ்வாறு அரசு அலுவல்கங்களில் இருந்து விபரங்கள் அறியும் முறைகள் பயிற்றுவிக்கப்பட்டன. மேலும் இந்நிகழ்ச்சி முகநூல் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது, வெளியூர் மற்றும் வெளிநாட்டு சகோதரர்களும் விபரங்களை அறிந்து கொள்வதற்கு வசதியாக இருந்தது. பின்னர் அந்நிகழ்ச்சியை தொடர்ந்து இன்று 05-11-2016 நிகழ்ச்சியில் நிரப்பம் செய்யப்பட்ட படிவங்களை அரசு அலுவலகங்கஞக்கு தபால் நிலையத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதனுடைய விளக்கமுறையும் பயிற்றுவிக்கப்பட்டது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் சமுதாயத்துக்கு மிக முக்கியமானதாகவும், விழிப்புணர்வை உண்டாக்க கூடியதாகவும் இருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.