
கீழக்கரை பள்ளி வாகன ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்..
கீழக்கரையில் சில தினங்களுக்கு முன்பு சகோதரர் ஒருவர் முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் முறையான உரிமம் இல்லாத ஓட்டுனர்கள் மீது நடவடிக்ககை எடுக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று வாகன ஓட்டுனர்கள் இந்த செயலலைக் கண்டித்து வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்து இருந்தார்கள். ஆனால் இந்த வேலை நிறுத்தத்தால் பள்ளி சிறார்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு சுமூகமான தீர்வு காண சமூக ஆர்வலர்கள் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்து இருந்தார்கள். அதன் அடிப்படையில் கீழக்கரையில் உள்ள புதிய பாலத்தில் இன்று காலை 10.30 மணி அளவில் வாகன ஓட்டுனார்களுடன் மக்கள் நலப் பாதுகாப்பு கழகம் மற்றும் கீழக்கரை மக்கள் களத்தின் சட்ட பிரிவான கீழக்கரை சட்டப் போராளிகள் தளம் மற்றும் பிற சமூக ஆர்வலர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் நலப் பாதுகாப்பு கழகத்தை சார்ந்த சமூக ஆர்வலர் சாலிஹ் ஹீசைன் அவர்கள் இந்த வேலை நிறுத்தத்தால் ஏற்படும் சிக்கல்களையும், பள்ளிச் சிறார்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைக் குறித்து விரிவாக விளக்கி ஓட்டுனர்களுக்கு எடுத்துரைத்து வருங்காலங்களில் ஒற்றுமையாக செயல்படுவதற்கான வழிமுறைகளையும் விளக்கி கூறினார். இந்த சுமூகமான பேச்சு வார்த்தை மூலம் ஓட்டுனர்கள் போராட்டத்தை எந்த நிபந்தனைகளும் இன்றி வாபஸ் பெற்றுக் கொண்டனர். மேலும் சமூக ஆர்வலர்களளின் அறிவுரையின் பேரில் இன்று முதல் உடனடியாக திரும்பினர்.உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Like this:
Like Loading...
Related
error: Content is protected !!
You must be logged in to post a comment.