கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் நாளை (06-11-2016) TNPSC (Group-4) தேர்வு நடைபெற உள்ளது

இந்த விஷயம் எத்துணை கீழக்கரை வாசிகளுக்கு தெரியும் தமிழம் முழுவதும் இந்த தேர்வை 13 லட்சம் நபர்களுக்கு மேல் எழுதுகின்றனர். கீழக்கரையிலிருந்து எத்துனை பேர் என்றால், விடையாக ஒரு மிகப்பெரிய கேள்விக் குறிதான் வருகின்றது TNPSC என்ற தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் துணை கலெக்டர் முதல் துணை காவல் கண்காணிப்பாளர்(DSP), தாசில்தார், கிளர்க் (Clerk) வரை அரசுப் பணியில் நியமனம் செய்யப்படுகின்றனர். இன்று நமது ஊரில் இருக்கும் DSP யும் TNPSC தேர்வில் தேர்ச்சி பெற்று இப்பணிக்கு வந்தவர் தான் என்று உங்களுக்கு தெரியப்படுத்துக் கொள்கின்றேன். LKG யில் பிள்ளையை சேர்க்கும் பொழுதே துபாய்க்கு அனுப்ப வேண்டும் என்ற குறிக்கோளுடன் நம் பிள்ளைகளை வளர்த்தால் நம் தலைமுறைகள் நம் நாட்டின் அதிகார வர்க்கத்தில் ஒரு போதும் பங்கெடுக்க முடியாது துபாய்…துபாய்.. என்று நம் பிள்ளைகளை எதிர்காலமில்லாத பாலைவனத்திற்கு அனுப்ப ஆசை படாமல், நமது நாட்டிலேயே அரசு அதிகாரிகளாக வலம் வரச் செய்ய ஒவ்வொரு பெற்றோர்களும் விரும்பிட வேண்டும். இளமையை உறிஞ்சி, சொந்தங்களை பிரிந்து, பணத்தை மட்டுமே தரும் நிரந்தரம் இல்லாத இந்த துபாய் வாழ்க்கையை நமது பிள்ளைகளுக்கு ஒரு போதும் கொடுத்திட வேண்டாம் பணம் மட்டுமல்ல வாழ்க்கை… நம் பிள்ளைகளை அதிகார வர்க்கத்தினராக மாற்றுவோம்.
செய்தி மூலம், சகோதரர் MMK. ஜமால் இபுராஹிம் முகநூல் பக்கம்உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Like this:
Like Loading...
Related