கீழக்கரையையும் விடவில்லை பீதி… ஒடுங்கிப் போய் இருக்கும் கடைத்தெருக்கள்..
ஆசிரியர்
December 20, 2016
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களாக முதல்வர் உடல் நலம் பற்றிய பல விதமான செய்திகள் பரவி வந்த நிலையில் இன்று விரும்பத்தகாத செய்திகள் மிக வேகமாக எங்கும் பரபரப்பாக பேசப்பட்டது. கீழக்கரையிலும் அசம்பாவிதத்ததிற்கு பயந்து அனைத்து கடைகள், மருந்தகங்கள் மற்றும் வணிக மையங்கள் எல்லாம் மாலையிலேயே அடைக்கப்பட்டுவிட்டன். ஆங்காங்கே சில மருந்தகங்களும், ஓட்டல்களும் மட்டுமே திறந்து காணப்படுகிறது. ஆகையால் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கான பொருட்கள் வாங்க மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள்.