கீழக்கரையில் கடந்த சில வாரங்களாக எந்த முன்னறிவுப்புமின்றி ஆட்டிறைச்சி விலை கடுமையாக உயர்த்தபட்டது. இதைப் பற்றி விசாரனை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு கீழக்கரையில் உள்ள சமூக ஆர்வலர்களால் மனு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று கீழக்கரை நகராட்சி நிர்வாகம் கீழக்கரை ஆட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் மற்றும் சமூக அமைப்பினர்களை கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தனர்.
இன்று மாலை 03.00 மணியளவில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சந்திரசேகர் தலைமையில் நகராட்சி கூட்ட அரங்கில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கத்தில் நகராட்சி அலுவலர் திண்ணாயிரமூர்த்தி கீழக்கரையில் 20லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் ஆடு வதை செய்யும் நிலையத்தை முறையாக உபயோகப்படுத்தும் படியும் அதனால் உள்ள சுகாதாரத்தைப் பற்றியும் வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து இரு தரப்பினரின் விலைவாசி உயர்வு பற்றிய கலந்தாய்வும் கருத்துப் பறிமாற்றமும் நடைபெற்றது. சமூக ஆர்வலர்கள் உடனடியாக விலையை குறைக்க வலியுறுத்திய பொழுது ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் எந்த முடிவும் உடனடியாக கூறாமல் நாளைக்குள் கலந்து ஆலோசனை செய்து கூறுவதாக அறிவித்தார்கள்.
இக்கூட்டம் முடியும் தருவாயிலும் நகராட்சி ஆணையர் மற்றும் பொறுப்பாளர்கள் முறையாக அமைக்கப்பட்டு குத்தகைக்கு விடப்பட்டுள்ள ஆடு வதை செய்யும் கூடத்தை முழுமையாக பயன்படுத்துமாறு வலியுறுத்தினார்கள்.

இக்கூட்டத்தில் SDPI கட்சியை சார்ந்த முன்னாள் கவுன்சிலர் ஜஹாகிங்கர் அரூசி மற்றும் பொறுப்பாளர் ராசிக் கீழக்கரை நகர் நல இயக்கத்தைச் சார்நத் பசீர் மரைக்கா மக்கள் டீம் காதர், மக்கள் நல பாதுகாப்பு கழகம் சாலிஹ் ஹீசைன், கீழக்கரை சட்டப் போராளிகள் குழுமத்தைச் சார்ந்த பாதுஷா மற்றும் முஹம்மது ரிஃபான் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

சமூக ஆர்வலர்கள் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்குமா?? இறைச்சி விலை குறையுமா?? மக்கள் பலன் அடைவார்களா?? நாளை வரை பொறுத்திருப்போம்..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











கீழக்கரை சுற்று புறத்தில் ஆடு பண்ணைகளை உருவாக்க வேண்டும் , முறையான ஆடு பண்ணையின் மூலம் அதிகமான வருமானம் பெற முடியும் , ஆடு வளர்ப்பதருக்கு வேலை வாய்ப்பு உதவி செய்யலாம் , கீழக்கரை சேர்ந்த மக்கள் ஆடு வளர்க்கும் பண்ணைகளை தொழில் ரீதியா செய்ய முன் வர வேண்டும் , இதன் மூலம் ஆடு கரி விலை உயர்வை கட்டு படுத்த முடியும் ,மற்றும் கீழக்கரையில் பயனற்று கிடக்கும் இடத்தில , பால் பண்ணைகளை உருவாக்கலாம் , கைத்தொழில் கூடங்களை ஏற்படுத்தலாம் இதன் மூலம் கீழக்கரை ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதோடு நிரந்தர வருமானம் கிடைக்கும்