இராமநாதபுரத்தில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. “ஷரியத் சட்டத்தில் கை வைக்காதே“

இன்று (05-11-2016) இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் NWF சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக பாரதிய ஜனதா மத்திய அரசு சிறுபான்மை மக்களின் உரிமைகளை நசுக்குவது தொடர்ந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் மத்திய அரசு கையில் எடுத்திருக்கும் விசயம் பொது சிவில் சட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய மார்க்கதின் உயிர் மூச்சான ஷரீஅத் சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வருவதாகும். இந்த சட்டத்திற்கு பல சமுதாயம் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதை வலுப்படுத்தும் விதமாக இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் NWF சார்பாக இராமநாதபுரம் சந்தை திடலில் மாலை 4.30 மணி அளவில் ஷரியத் சட்டத்தில் கை வைக்காதே என்ற கோஷத்தை முன் வைத்து பொது சிவில் சட்டத்தை கொண்டு வரத் துடிக்கும் மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டம் பாப்புல் ஃப்ரண்ட் மாநில செயலாளர் ஜெ.முகம்மது ரசின் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. மேலும் பல அரசியல் மற்றும் பல சமூக அமைப்பில் உள்ள தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். கீழக்கரையில் இருந்து அனைத்து பெண்கள் மதரஸா ஆசிரியை சகோதரி. ஆபிதா டீச்சர் கலந்து கொள்வது கவனிக்கப்பட வேண்டிய செய்தியாகும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Like this:
Like Loading...
Related
You must be logged in to post a comment.