ஆன் லைன் பெட்டிசன் குளறுபடி.. கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம் ஆட்சியரிடம் மனு..

கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதியில் செயல்படும் அரசுத் துறையிலும், அதுசார்ந்து எழும் பிரச்சினைகளை அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு எளிதாக கொண்டு செல்லும் வகையில் ஆன் லைன் பெட்டிசன் வசதி இருந்து வந்தது. இதன் மூலம் ஒவ்வொரு வாரமும் குறைந்தது நூறுக்கும் மேற்பட்ட மனுக்கள் அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அத்தளம் onlinegdp.tn.nic.in என்ற முகவரியில் செயல்பட்டு வந்தது, அதில் தங்கள் குறைகளை 500 எழுத்துகக்களுக்கு மிகாமல் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நடைமுறையில் 50 எழுத்துக்களுக்கு மேல் டைப் செய்ய முடிவதில்லை ஆகையால் பிரச்சினைகளை விரிவாக பொதுமக்களால் தெரிவிக்க முடியாத நிலை இருந்து வந்ததது. மேலும் கடந்த சில தினங்களாக இணையதளமும் சரியான முறையில் இயங்காமல் தொழில் நுட்ப கோளாறு என்ற வாசகமும் வந்த வண்ணம் இருந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இன்று கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக சகோ.சாலிஹ் ஹீசைன் அவர்கள் மாவாட்ட ஆட்சியர் குறை தீர்க்கும் நாளில் மனு அளித்தார். அதைப் பெற்றறுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சினையில் தலையிட்டு உடனடியாக தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Like this:
Like Loading...
Related
You must be logged in to post a comment.