ஆணானந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஆணானந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை வரவேற்கும் விதமாக பள்ளி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் தேன்மொழி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார் விழாவில் பள்ளி மாணவியர்கள் கலந்து கொண்டு புது பானையில் பொங்கலிட்டு கும்மியடித்து கோலங்கள் போட்டு தோரணம் கட்டி கரும்பு வைத்து பூஜை செய்து பொங்கலை வரவேற்றனர் பொங்கல் விழாவையொட்டி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் தேன்மொழி வழங்கி மேலும் பழையன கழிதல் புதியன புகுதல் என்று போகி பண்டிகை பழைய பொருட்கள் எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது என்றும் ஆதலால் புகையில்லா போகி கொண்டாடுவோம் என்றும் கூறினார் விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள் ஜெசிந்தாமேரி, ஜேம்ஸ்ராபர்ட், பவானி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் முத்துகிருஷ்ணன் கலந்து கொண்டனர் இறுதியாக தனலட்சுமி நன்றியுரை கூறினார்
You must be logged in to post a comment.